பாடசாலைகளில் வரலாற்று கல்வி கற்பிப்பதை நிறுத்த வேண்டும்! அர்ச்சுனா வலியுறுத்து
Ministry of Education
Sri Lanka
Ramanathan Archchuna
By Dharu
பாடசாலை மாணவர்களுக்கு வரலாறு கற்பிப்பதை நிறுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
விருப்பப் பாடங்கள்
“1600 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு நல்ல வரலாறு இல்லை. இலங்கை தமிழ் மக்களுக்கோ அல்லது சிங்கள மக்களுக்கோ சொந்தமானது என்று வரலாறு கற்பிக்கிறது.
இதை மக்களின் தலையில் திணிக்கக்கூடாது. தேவைப்பட்டால் மட்டுமே படிக்கவேண்டிய விருப்பப் பாடங்களாக அந்தப் பாடங்கள் இருந்தால் போதுமானது” என தெரிவித்துள்ளார்.
