போலி யுவான் நாணயத்தாள்களுடன் சிக்கிய சீன பிரஜை!
இரத்தினபுரி - திருவனாகெடிய பகுதியில் 4,000 போலி யுவான் நாணயத்தாள்களை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சந்தேக நபர் கஹவத்தை காவல்துறை விசேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 28 வயதுடைய சீன பிரஜை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறையினர் விசாரணை
இந்த சம்பவம் குறித்து கஹவத்தை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, இரத்தினபுரி, திருவனாகெடிய பகுதியில் 6 கிலோகிராம் 32 கிராம் போலி இரத்தினக் கற்களுடன் மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரிடம் இருந்து ஒரு மடிக்கணினி, 1 ஐ பாட் மற்றும் ஒரு கையடக்க தொலைபேசி ஆகியவை மீட்கப்பட்டன.
சந்தேக நபர் 52 வயதுடைய சீன பிரஜை என காவல்துறையினர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
