விமானப்படை வீரரைக் கடத்திச்சென்று கட்டி வைத்துத் தாக்கிய மர்மக் கும்பல்!

Sri Lanka Police Batticaloa Polonnaruwa Sri Lanka Sri Lanka Air Force
By Kalaimathy Jul 28, 2022 11:49 AM GMT
Report

சிறிலங்கா விமானப்படை வீரர் ஒருவர் மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் மட்டக்களப்பில் பணிபுரியும் விமானப்படை வீரர் எனவும், அடையாளந்தெரியாத குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டு்ள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டி வைத்து தாக்குதலுக்குள்ளான நிலையில், இன்று காலை மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

விமானப்படை வீரர் வீட்டிலிருந்து நேற்று மாலை கடமைக்குச் சென்றுகொண்டிருந்த வேளையில்  இனம்தெரியாத குழுவினரால் கடத்தப்பட்டுள்ளார்.

உறுதிப்படுத்திய ஊடகப்பேச்சாளர்

விமானப்படை வீரரைக் கடத்திச்சென்று கட்டி வைத்துத் தாக்கிய மர்மக் கும்பல்! | Sri Lanka Air Force Attack Batticalo Valaichenai

மட்டக்களப்பு பொலனறுவ எல்லைப்பகுதியான அரலகங்வில பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விமானப்படை ஊடகப் பேச்சாளர் குறூப் கெப்டன் துஷான் விஜேசிங்க இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

விமானப்படை வீரரை கடத்திச் சென்ற குழுவினர் அவரின் ஆடைகளை அகற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த விமானப்படை வீரர் தற்போது வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.    

அவரை கட்டி வைத்திருந்த மரத்தின் அருகே “முரட்டு அரசியலுக்கு உதவும் கைக்கூலிகள் இப்படித்தான் கொல்லப்படுகிறார்கள்” என்று தமிழ் மொழியில் எழுதப்பட்ட பதாகை ஒன்றும் வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் விமானப்படை மற்றும் காவல்துறையினர் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி