மத்திய ஆபிரிக்காவிற்கு பறந்த இலங்கை விமானப்படை துருப்புகள்
இலங்கை விமானப்படையின் உலங்குவானூர்தி படைப்பிரிவின் 108 பேர் கொண்ட குழு மத்திய ஆபிரிக்க குடியரசிற்கு புறப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிகளுக்காக குறித்த குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு புறப்படும் உலங்குவானூர்தி படைப்பிரிவின் துருப்புக்கள் போக்குவரத்து, விஐபி போக்குவரத்து, உணவு மற்றும் பானங்கள் / சரக்கு போக்குவரத்து, உள்நாட்டு விமானங்கள், பாராசூட் மூலம் பொருட்களை இறக்குதல், மருத்துவ குழு போக்குவரத்து உள்ளிட்ட பல தனித்துவமான பணிகளுக்கு தீவிரமாக பங்களிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
நாடு திரும்பிய வீரர்கள்
இதேவேளை, மத்திய ஆபிரிக்க குடியரசில் அமைதி காக்கும் பணிகளுக்காக அனுப்பப்பட்ட விமானப்படை உலங்குவானூர்தி படைப்பிரிவைச் சேர்ந்த 92 விமானப்படை பணியாளர்களும் சமீபத்தில் மத்திய ஆபிரிக்காவில் இருந்து இலங்கை திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில், இலங்கை விமானப்படை 2014 ஆம் ஆண்டு முதல் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக பங்களித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |