சிறி லங்கா எயார் லைன்ஸின் தாமதம் - எடுக்கப்படவுள்ள நடவடிக்கை
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் சிறி லங்கன் எயார் லைன்ஸ் விமானம் தாமதமானது தொடர்பில் அங்குள்ள தனது அதிகாரிகளிடம் அறிக்கை கோருவதற்கு சிறி லங்கன் எயார்லைன்ஸ் தீர்மானித்துள்ளது.
மெல்பேர்ன் விமான நிலையத்தில் பல மணிநேரம் அசௌகரியங்களுக்கு உள்ளான பயணிகளுக்கு சிறந்த வசதிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சிறி லங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த சம்பவத்தில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதே தனது முன்னுரிமை என சிறி லங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
விமானத்தில் ஏற்பட்ட கோளாறு
[L33CHQ[
கடந்த சனிக்கிழமை, ஏப்ரல் 15ஆம் திகதி, அவுஸ்திரேலிய நேரப்படி மாலை 4.10 மணியளவில், மெல்பேர்னிலிருந்து புறப்பட்டு கொழும்பு நோக்கிப் பயணிக்கவிருந்த சிறி லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-605, எதிர்பாராதவிதமாக தாமதமானது. விமானத்தில் ஏற்பட்ட கோளாறுதான் இதற்குக் காரணம்.
அதோடு அந்த விமானம் மூலம் இலங்கைக்கு வரவிருந்த பயணிகள் மெல்பேர்ன் விமான நிலையத்தில் கடும் சிரமத்துக்குள்ளாகினர். சிறி லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பொறுப்பான அதிகாரிகள் யாரும் நிலைமையை ஆராய வரவில்லை என பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
30 மணி நேரம் தாமதமாக
எனினும், விமானத்தில் ஏற்பட்ட கோளாறுகளை சரிசெய்வதற்காக சிறி லங்கன் ஏர்லைன்ஸ் 6 பொறியியலாளர்கள் கொண்ட குழுவை சனிக்கிழமை இரவு மெல்பேர்னுக்கு அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏறக்குறைய 30 மணி நேரம் தாமதமாக சிறி லங்கன் விமானம், மெல்பேர்ன் விமான நிலையத்தில் இருந்து நேற்று (16) உள்ளூர் நேரப்படி இரவு 10 மணிக்கு 218 பயணிகளுடன் புறப்பட்டது.
குறித்த விமானம் இன்று (17) காலை 7.40 மணியளவில் கட்டுநாயக்கவில் தரையிறங்கியது.
