சர்வகட்சி போர்வையில் 'ராஜபக்ச' ஆட்சி - ஐ.தே.க பிரமுகர் குற்றச்சாட்டு
சர்வகட்சி அரசாங்கம் என்ற போர்வையின் கீழ் இலங்கையில் தற்போது ராஜபக்ச அரசாங்கம் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கருணாரத்ன பரணவிதான குற்றஞ்சாட்டியுள்ளார்.
இலங்கையில் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படுவது தொடர்பான திட்டம் விரைவில் முன்வைக்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
சர்வகட்சி அரசாங்கம் தொடர்பான யோசனை
“சர்வகட்சி அரசாங்கம் தொடர்பான யோசனை எங்களுடையது. இந்தத் திட்டத்திற்கு எமது முழு ஆதரவும் வழங்கப்படும்.
எனினும் இலங்கையில் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட முன் வன்முறைகளும் அடக்குமுறைகளும் நிறுத்தப்பட வேண்டும்.
போராட்டக்காரர்கள் மீது தொடுக்கப்படும் வன்முறையான செயல்களும் சட்ட நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
அதிபரின் கொள்கைப் பிரகடனத்தில் சொல்லப்பட்டவை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
YOU MAY LIKE THIS
