ரணில், அலி சப்ரியுடன் டொனால்ட் லூ சந்திப்பு
புதிய இணைப்பு
தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ அதிபர் ரணில் விக்ரமசிங்கவை இன்று சந்தித்தார்.
அதிபர் செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக அதிபரின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
இந்தச் சந்திப்புக்கு முன்னதாக, டொனால்ட் லூ வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியையும் சந்தித்தார்.
வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த சிறிலங்காவிற்கா அமெரிக்க தூதுவர் ஜூலி சங், பொருளாதார சீர்திருத்தங்கள், பொறுப்புக்கூறல் மற்றும் இலங்கையர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதன் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்தார்.
ஜனநாயக நாடுகளாக தங்கள் நீண்டகால கூட்டாண்மை மற்றும் நட்பைத் தொடர எதிர்நோக்குகிறோம் என்று அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
Sri Lanka is at a critical juncture in its history as it emerges from its worst economic crisis. In meeting w/ @RW_UNP, @State_SCA Assistant Secretary Lu & I discussed the challenges and opportunities for partnership as ??’s President works toward a better future for all. pic.twitter.com/yDa5mdLkPZ
— Ambassador Julie Chung (@USAmbSL) October 19, 2022
முதலாம் இணைப்பு
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ இன்று சிறிலங்கா வந்தடைந்தார்.
சிறிலங்கா வந்திறங்கிய டொனால்ட் லூவை சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் வரவேற்றுள்ளார்.
சிறிலங்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ இலங்கையின் குடிசார் சமுக செயற்பாட்டாளர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அதேநேரம் இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பில் டொனால்ட் லூ சிறிலங்காவின் உயர் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவர்த்தை நடத்தவுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அமெரிக்கா மற்றும் சிறிலங்காவிற்கு இடையிலான உறவுகள் மற்றும் இலங்கையின் பொருளாதார நிலைமைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக டொனால்ட் லூ இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூவை சிறிலங்காவிற்கான அமெரிக்க துாதுவர் ஜூலி சங் வரவேற்றுள்ளார்.
அதிகாரிகளை சந்திக்கவுள்ள டொனால்ட் லூ
இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பில் டொனால்ட் லூ சிறிலங்காவின் உயர் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவர்த்தை நடத்தவுள்ளார். பிராந்திய பாதுகாப்பு, இலங்கையின் பொருளாதார நெருக்கடி, மனித உரிமைகள் நிலவரங்கள் குறித்து அவர் விவாதிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலே டொனால்ட் லூ இன்று குடிசார் சமூக பிரதிநிதிகளை சந்தித்து, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல் மற்றும் தற்போதைய சவால்களை வெற்றி கொள்ளுதல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களுக்கு சேவை செய்வதற்கும் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதற்கும் வலுவான குடிசார் சமூகம் முக்கியமானது என சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
I welcomed @State_SCA Asst Sec Don Lu to Sri Lanka today. Visiting from Washington, A/S Lu is here to meet with government officials and community leaders to build on the support the U.S. has provided Sri Lanka in establishing a brighter future for all its citizens. pic.twitter.com/WuD4bKtfph
— Ambassador Julie Chung (@USAmbSL) October 19, 2022
