2025 இல் சுற்றுலா பயணிகளுக்கான சிறந்த நாடுகளில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்
Sri Lanka Tourism
Tourism
Tourist Visa
By Dilakshan
2025 ஆம் ஆண்டில் சுற்றுலாப்பயணிகள் பயணிப்பதற்கான சிறந்த நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த பட்டியலில் 2025 ஆம் ஆண்டில் சுற்றுலா பயணிகள் பயணிப்பதற்கு சிறந்த நாடுகளில் இலங்கை மூன்றாம் இடத்தில் உள்ளது.
சீ.என்.ட்ரெவலர் வெளியிட்டுள்ள புதிய அறிக்கைக்கு அமைய சுற்றுலாப் பயணிகள் பயணிப்பதற்கான சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம் பிடித்துள்ளது.
காரணம்
வெப்பநிலை, இயற்கை அழகுகள், கடற்கரைகள் உள்ளிட்டவற்றை இரசிப்பதற்காக பெருமளவான சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஆண்டு சுற்றுலாப்பயணிகள் பயணிப்பதற்கான சிறந்த நாடுகளின் பட்டியலில் பிலிப்பைன்ஸ் முதலாம் இடத்திலும், இத்தாலி இரண்டாம் இடத்திலும் பெயரிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
1 வாரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்