கடற்கரையில் புதைந்திருந்த மர்மப் பொருள் - ஸ்தலத்திற்கு விரைந்த விசேட அதிரடிப்படை!
அம்பாறை கடற்கரைப் பகுதியில் மண்ணில் புதைந்திருந்த நிலையில் மிதிவெடி ஒன்று காணப்படுவதாக பிரதேச வாசிகளால் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வெடி பொருள் இன்று காலை அம்பாறை கடற்கரைப் பகுயில் இருந்த மீட்கப்பட்டுள்ளது. மிதிவெடி இனங்காணப்பட்ட நிலையில் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது காவல்துறையினர் அதனை மீட்டுள்ளனர்.
காவல்துறையினரால் மீட்கப்பட்ட மிதிவெடி பழையதா அல்லது வேறு இடம் ஒன்றில் இருந்து எடுத்து வரப்பட்டுள்ளதா என்ற விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்திருந்தனர்.
அபாயகர பொருள்
மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் வழங்கிய தகவலுக்கமைய குறித்த மிதிவெடி மீட்கப்பட்டள்ளது.
இவ்வாறான நிலையில், மீட்கப்பட்டது, மிதிவெடி எனக் கூறப்பட்ட போதிலும் அதை தற்போது விசேட அதிரடிப்படையினர் பரிசோதனை செய்து பார்த்ததில் மிதிவெடி அல்ல எனவும் வாயு நிரப்பப்பட்ட பொருள் எனவும் உறுதிப்படுத்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




