இலங்கையில் அமளிதுமளி! இந்தியாவில் இருந்து வந்த செய்தி
இலங்கையில் ஏற்பட்டுள்ள பெரும் நெருக்கடியான சூழலில் அந்நாட்டு மக்களுடன் தமது கட்சி துணை நிற்கிறது என காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நிலவும் அரசியல் சூழ்நிலையை வருத்தத்துடன் காங்கிரஸ் கட்சி கவனித்து வருகிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் பெரும் நெருக்கடியான சூழல்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார சவால்கள், விலைவாசி உயர்வு மற்றும் உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை ஆகியவற்றால் மக்களிடையே பாரிய அளவில் பாதிப்பும், மனஅழுத்தமும் ஏற்பட்டுள்ளதாக சோனியா காந்தி கூறியுள்ளார்.
இலங்கை மக்கள் இந்த நெருக்கடியில் இருந்து மீண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச சமூகத்தின் ஆதரவு
நடப்பு சூழ்நிலையில் கஷ்டங்களை எதிர்கொண்டு வரும் இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இந்தியா தொடர்ந்து உதவிகளை வழங்கும் என தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று, சர்வதேச சமூகமும் இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும், ஆதரவையும் வழங்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி மேலும் வலியுறுத்தியுள்ளது.
