மனித உரிமை மீறலில் ஈடுபட்ட பிள்ளையான் உட்பட மூவர் அமைச்சர்களாக நியமனம் -ரணில் மீது மனித உரிமைகள் கண்காணிப்பகம் பாய்ச்சல்

By Sumithiran Sep 09, 2022 04:33 PM GMT
Report

புதிய இராஜாங்க அமைச்சர்கள் நியமனமானது ரணில் விக்ரமசிங்கவின் நிர்வாகம் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், தண்டனையிலிருந்து விடுபடுவதற்கும் அல்லது சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கும் அர்ப்பணிப்புடன் இல்லை என்பதை சுட்டிக்காட்டுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) தெரிவித்துள்ளது.

அறிக்கையொன்றை வெளியிட்ட மனித உரிமைகள் ஆணையம், அதிபர் ரணில் விக்ரமசிங்க வியாழன் அன்று தனது அரசாங்கத்தில் 37 புதிய இராஜாங்க அமைச்சர்களை நியமித்துள்ளார், அவர்களில் மூன்று பேர் கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.

மனித உரிமை மீறலில் ஈடுபட்ட பிள்ளையான் உட்பட மூவர் அமைச்சர்களாக நியமனம் -ரணில் மீது மனித உரிமைகள் கண்காணிப்பகம் பாய்ச்சல் | Sri Lanka Appoints Alleged Rights Abusers

பிள்ளையான் நியமனம்

பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) முன்னாள் உறுப்பினராவார். அவர் சிறுவர்களைக் கடத்தல் மற்றும் ஏனைய துஷ்பிரயோகங்களில் தனிப்பட்ட முறையில் சம்பந்தப்பட்டவர். பின்னர் அவர் அரசு சார்பு ஆயுதக் குழுவில் சேர்ந்தார், அது கடத்தல் மற்றும் சிறுவர்களை படையில் ஆட்சேர்ப்பு செய்வதற்கும் பொறுப்பாக இருந்தது. 2005 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைக் கொன்றது தொடர்பாக பிள்ளையானுக்கு எதிரான குற்றச்சாட்டை ஜனவரி 2021 இல், சட்டமா அதிபர் கைவிட்டார். தற்போது அவர் கிராமப்புற சாலை மேம்பாட்டுத் துறை அமைச்சராக உள்ளார்.

லொஹான் ரத்வத்த

மனித உரிமை மீறலில் ஈடுபட்ட பிள்ளையான் உட்பட மூவர் அமைச்சர்களாக நியமனம் -ரணில் மீது மனித உரிமைகள் கண்காணிப்பகம் பாய்ச்சல் | Sri Lanka Appoints Alleged Rights Abusers

புதிதாக நியமிக்கப்பட்ட மற்றொரு அமைச்சர் லொஹான் ரத்வத்த ஆவார், இவர் துப்பாக்கி முனையில் கைதிகளை மிரட்டியதையடுத்து பொதுமக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து 2021 செப்டம்பரில் சிறைத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் இப்போது பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சராக உள்ளார்.

சனத் நிஷாந்த

மேலும், புதிய நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சரான சனத் நிஷாந்த, அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்கள் மீதான வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுவதற்காக தற்போது காவல்துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மே 9 அன்று, கொழும்பில் நடைபெற்ற அமைதியான ஆர்ப்பாட்டத்தின் மீது அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் தாக்குதலை நடத்தினர் சம்பவம் தொடர்பில் மே 15ஆம் திகதி கைது செய்யப்பட்ட நிஷாந்த, ஒரு மாதத்தின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

மனித உரிமை மீறலில் ஈடுபட்ட பிள்ளையான் உட்பட மூவர் அமைச்சர்களாக நியமனம் -ரணில் மீது மனித உரிமைகள் கண்காணிப்பகம் பாய்ச்சல் | Sri Lanka Appoints Alleged Rights Abusers

கோட்டாபய  இராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம்

பணவீக்கம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு ஆகியவை பொருளாதார முறைகேடு, ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக மார்ச் மாதம் பாரிய ஆர்ப்பாட்டங்களைத் தூண்டியதாகவும், இறுதியில் அதிபர் கோட்டாபய ராஜபக்ச இராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும், ஜூலை மாதம் ரணில் விக்ரமசிங்க அதிபராக வருவதற்கு வழிவகுத்ததாகவும் மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மே மாதம், இலங்கை தனது வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்தவில்லை, செப்டம்பர் 1 அன்று சர்வதேச நாணய நிதியத்துடன் பிணை எடுப்புத் திட்டத்திற்கு ஒப்புக்கொண்டது. அதிபர் விக்ரமசிங்க, எதிர்ப்பாளர்களை வலுக்கட்டாயமாக கலைக்க இராணுவத்தைப் பயன்படுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஏராளமானவர்களைக் கைது செய்ததன் மூலம், கடுமையான ஒடுக்குமுறையை விரைவாகத் தொடங்கினார். அவர் கொடூரமான மற்றும் மதிப்பிழந்த பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி, எதிர்ப்பு தெரிவிக்கும் தலைவர்களை எந்தக் குற்றச்சாட்டும் இன்றி தடுத்து வைக்கிறார்.

மனித உரிமை மீறலில் ஈடுபட்ட பிள்ளையான் உட்பட மூவர் அமைச்சர்களாக நியமனம் -ரணில் மீது மனித உரிமைகள் கண்காணிப்பகம் பாய்ச்சல் | Sri Lanka Appoints Alleged Rights Abusers

இலங்கையின் மனித உரிமைகள் நிலை

இந்த மாதம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்த புதிய தீர்மானம் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. இந்த வாரம் அரசாங்கத்தின் மோசமான நியமனங்கள் மற்றும் அமைதியான எதிர்ப்புக்களுக்கு அதன் கடுமையான பிரதிபலிப்பு, இலங்கையின் உரிமைகள் நிலைமை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதை ஐநா உறுப்பு நாடுகளுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் மேலும் தெரிவித்துள்ளது.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, Scarborough, Canada

14 Jul, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Melbourne, Australia

14 Jul, 2025
17ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2008
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Frutigen, Switzerland

17 Jul, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ontario, Canada

16 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, சிட்னி, Australia

13 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Bremen, Germany

10 Jul, 2025
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், பம்பலப்பிட்டி

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

17 Jul, 2024
மரண அறிவித்தல்

கொடிகாமம், Recklinghausen, Germany, Harrow, United Kingdom

14 Jul, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Holland, Netherlands

12 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், London, United Kingdom

09 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், முகத்தான்குளம், செட்டிக்குளம், Liverpool, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019