யுத்தம் தின்ற மண்ணை இந்தியாவிற்கு விற்கும் அநுர அரசு
வடக்கு கிழக்கில் ஈழத்தமிழர்களின் நிலங்களை தொடர்ந்து ஆக்கிரமித்து வருகிறது சிறிலங்கா அரச இயந்திரம்.
வடக்கில் சுமார் 5941 ஏக்கர் நிலப்பகுதியை சுவீகரிக்க திட்டமிட்ட அரசு அது தொடர்பில் ஒரு வர்த்தமானி வெளியிட்ட நிலையில் கிழக்கில் இது காலம் காலமாக இடம்பெறுகிறது.
நேற்று திருகோணமலையில் கப்பல்துறை முத்துநகர் பகுதியில் நீதிமன்ற கட்டளை அடிப படையில் மக்களை வெளியேற்றிய துறைமுக அதிகாரசபை அந்த நிலங்களை சூலயகல மின் உற்பத்தி திட்டத்திற்காக இந்திய நிறுவனங்களுக்கு வழங்க உள்ளது.
அதே நிலை தான் சம்பூர் என்ற பாரம்பரிய கிராமத்தின் சுமார் 810 ஏக்கர் நிலத்தை கடல்படை முகாம் மற்றும் சூரியசக்தி மின் திட்டத்திற்காக என விவசாய நிலங்களை ஆக்கிரமித்து வைத்துள்ளது.
இந்த நிலையில் மக்கள் அரசு என்ற போர்வையில் யுத்தம் தின்ற இந்த மண்ணை இந்தியாவிற்கு விற்றுவிடும் அரச திட்டம் தொடர்பில் விரிவாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு..
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
