போதைப்பொருளுடன் சிக்கிய சிறிலங்கா இராணுவ சிப்பாய்
சிறி தலதா மாளிகையின் பாதுகாப்புக்கு இணையாக கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவசிப்பாய், ஹெரோயின் பொதியுடன் கைது செய்யப்பட்டதாக கண்டி காவல்துறை ஊழல் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த இராணுவ சிப்பாய், தலதா மாளிகையில் இருந்து சில மீற்றர் தூரத்தில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் ஒருவர் என்பதுடன் குட் ஷெட் பேருந்து நிலையத்துக்கு அருகில் ஹெரோயின் போதைப்பொருள் பொதியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹெரோயின் போதைக்கு அடிமை
தெனலகல, ஹொடியாதெனிய பிரதேசத்தில் வசிக்கும் குறித்த இராணுவ சிப்பாய், கடந்த மூன்று வருடங்களாக ஹெரோயின் போதைக்கு அடிமையாகியிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டாரா
சந்தேகநபர் 20
வருடங்களுக்கும்
மேலாக இராணுவ
சேவையில் இருப்பவர்
என்பதுடன் ஹெரோயின்
பயன்படுத்துவதற்கு
தேவையான பணத்தை
தேடிக்கொள்வதற்காக,
இராணுவ துப்பாக்கியைப்
பயன்படுத்தி கொள்ளைச்
சம்பவங்களில் ஈடுபட்டாரா
என்பது தொடர்பில்
விரிவான விசாரணைகள்
ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
