இலங்கையில் நடந்தது என்ன? உண்மையை அம்பலப்படுத்திய பண்டோரா ஆவணங்கள்!

Gotabaya Rajapaksa Sri Lanka Economic Crisis Sri Lanka
By Kalaimathy Sep 20, 2022 10:50 AM GMT
Report

பண்டோரா பேப்பர்ஸ் மூலம் வெளியாகியுள்ள நிதி மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளின் அண்மைய நிலவரத்தை கேட்டு, வெளிப்படைத்தன்மைக்காக அமைக்கப்பட்ட சர்வதேச அமைப்பு, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

பண்டோரா ஆவணங்களில் வெளிப்படுத்தப்பட்ட சொத்துக்கள் ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை தீர்மானிக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரத்தை கடிதம் மீண்டும் வலியுறுத்துவதாக டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் சிறிலங்கா தெரிவித்துள்ளது.

"பண்டோரா ஆவணங்கள் வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் சிறிலங்கா, முன்னாள் பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக்ச, அவரது கணவர் மற்றும் முன்னாள் அரச அதிகாரி ஆர். பாஸ்கரலிங்கம் ஆகியோரின் சொத்துக்கள் தொடர்பாக இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் 2 முறைப்பாடுகளை அண்மையில் தாக்கல் செய்தது."

நிதி மோசடி

இலங்கையில்  நடந்தது என்ன? உண்மையை அம்பலப்படுத்திய பண்டோரா ஆவணங்கள்! | Sri Lanka Bandora Papers

குறித்த நபர்களின் சொத்துப் பிரகடனங்களை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைத்துப் பரிசோதித்திருந்தால் அது தொடர்பில் அறிவிக்குமாறு ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் சிறிலங்கா சமீபத்திய கடிதத்தில் கோரியுள்ளது.

சொத்துக்கள் வேண்டுமென்றே குறிப்பிடப்படவில்லையா என்பதைப் புரிந்துகொள்வதற்கு இந்தத் தகவல் இன்றியமையாதது என டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் சிறிலங்கா மேலும் கூறுகிறது.

கடந்த வருடம், முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் உறவினர் மற்றும் அவரது கணவர் மீதான நிதி மோசடி குற்றச்சாட்டுகளை விசாரித்து ஒரு மாத காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோட்டாபய ராஜபக்சவின் பணிப்புரையை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நிறைவேற்றவில்லை.

முன்னாள் அதிபர் மற்றும் பிரதமரின் உறவினரான நிருபமா ராஜபக்சவும் அவரது கணவர் திருக்குமார் நடேசனும் போலி நிறுவனம் ஒன்றின் மூலம் குவிக்கப்பட்ட சொத்துக்களை மிக ஆடம்பரமான வாழ்க்கை வாழ பயன்படுத்தியதாக உலகின் மிகப்பெரிய ஊடக விசாரணையின் பின்னர் இலங்கையர்கள் பண்டோரா பேப்பர்ஸில் வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்ட நடேசன்

இலங்கையில்  நடந்தது என்ன? உண்மையை அம்பலப்படுத்திய பண்டோரா ஆவணங்கள்! | Sri Lanka Bandora Papers

விசாரணை நடத்தப்பட்டதோடு, ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிபர் உத்தரவிட்டிருந்தார். அதிபரின் சட்டப் பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்த ரோஹணதீர 2021ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவித்துள்ளதாக அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அந்த அறிவித்தலுக்குப் பின்னர் திருக்குமார் நடேசன் இரண்டு முறையாவது ஆணைக்குழு முன் அழைக்கப்பட்டார். அதிபரின் உத்தரவுக்கு ஒரு மாதத்தின் பின்னர், ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் டபிள்யூ.கே.டி.விஜேரத்ன நவம்பர் 8, 2021 அன்று அறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார்.

இது தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை என அதிபர் ஊடகப் பிரிவு அறிவித்திருந்தது. இறுதி அறிக்கைக்கான திகதியை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அறிவித்துள்ளதாக குறிப்பிடப்படவில்லை.

சேகரிக்கப்படும் வங்கி கணக்குகள்

இலங்கையில்  நடந்தது என்ன? உண்மையை அம்பலப்படுத்திய பண்டோரா ஆவணங்கள்! | Sri Lanka Bandora Papers

“திருக்குமார் நடேசனின் வங்கிக் கணக்கு விபரங்கள் அடங்கிய அறிக்கைகள் பல்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிலிருந்து எடுக்கப்பட்ட அறிக்கைகள் தற்போது கிடைத்து வருவதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்திருந்தார்.

விசாரணைகள் நிறைவடையாததால், அறிக்கைகள் மற்றும் ஏனைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு இறுதி அறிக்கை வழங்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நவம்பர் 2021 ஆரம்பத்தில் விசாரணைகள் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக ஆணைக்குழுவின் செயலாளர் அப்சரா கல்தேரா ஊடகங்களுக்குத் தெரிவித்தார். பண்டோரா பேப்பர்ஸ் என அழைக்கப்படும் சுமார் ஒரு கோடியே 20 ஆயிரத்திற்கும் அதிக ஆவணங்களின் தரவுத்தளமானது வொஷிங்டனை தளமாகக் கொண்ட சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்களின் கூட்டமைப்பால் (International Consortium of Investigative Journalists) வெளியிடப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் மற்றும் பிரதமரின் ஆலோசகராக இருந்த பிரித்தானிய குடியிருப்பாளர் இராமலிங்கம் பாஸ்கரலிங்கம், நவம்பர் 2021 தொடக்கத்தில் ICIJ ஆல் நிதி மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளானார்.

பிரித்தானியாவில் அறக்கட்டளைகள்

இலங்கையில்  நடந்தது என்ன? உண்மையை அம்பலப்படுத்திய பண்டோரா ஆவணங்கள்! | Sri Lanka Bandora Papers

மாலபேயில் உள்ள HCBT எனப்படும் Horizon College of Business Technology தனியார் பல்கலைக்கழகத்தில் முதலீடு செய்வதற்கும் பிரித்தானியாவில் சொத்துக்களை வாங்குவதற்கும் அவர் பிரித்தானியாவின் விர்ஜின் தீவுகளில்  நிறுவிய அறக்கட்டளைகள் மற்றும் நிறுவனங்களில் பில்லியன் கணக்கான டொலர்களைப் பயன்படுத்தியதாக பண்டோரா ஆவணங்கள் வெளிப்படுத்தின.

பாஸ்கரலிங்கம் 2008 ஆம் ஆண்டு எந்த அரசாங்க பதவியையும் வகிக்காமல், "தனது சொந்த செல்வத்தைப் பயன்படுத்தி" கல்லூரியை நிறுவியதாக, HCBT தலைவர் உபுல் தரனாகம ICIJ இடம் தெரிவித்தார்.

ராமலிங்கம் பாஸ்கரலிங்கம் மீதான நிதி மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளுக்கு அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை என ICIJ தெரிவித்துள்ளது.

அதிபர்களான  ரணசிங்க பிரேமதாச, டிங்கிரி பண்டா விஜேதுங்க மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் ஆலோசகர் பதவிகளை வகித்த பாஸ்கரலிங்கம் தொடர்பில் பண்டோரா பத்திரிக்கைகளில் வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்வதாக தெரியவில்லை.

117 நாடுகளைச் சேர்ந்த 600ற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் 90 அரச தலைவர்கள், உலகின் பணக்காரர்கள் மற்றும் அதிகாரம் படைத்தவர்கள் உட்பட 300ற்கும் மேற்பட்டவர்களின் நிதி பரிவர்த்தனைகளை ஆய்வு செய்துள்ளனர்.

நிருபமா ராஜபக்சவும் அவரது கணவர் திருக்குமார் நடேசனும் போலி நிறுவனம் ஒன்றின் மூலம் குவிக்கப்பட்ட செல்வத்தை மிகவும் ஆடம்பரமான வாழ்க்கைக்கு பயன்படுத்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011