குரங்குகளின் அட்டூழியம்: மில்லியன் கணக்கில் நாசமாக்கப்பட்ட தேங்காய்கள்!
குரங்குகள் உட்பட பல்வேறு விலங்குகளால் கடந்த வருடத்தில் எதிர்பார்த்த தேங்காய் அறுவடையில் 100 மில்லியன் தேங்காய்கள் சேதமடைந்துள்ளதாக தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுனிமல் ஜயக்கொடி இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், விலங்கு கணக்கெடுப்பு விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கான தீர்வாக அமையாது.
விலங்கு கணக்கெடுப்பு
விலங்கு கணக்கெடுப்புடன் மாத்திரம் நின்றுவிடாமல், பயிர் சேதத்தைக் கட்டுப்படுத்த ஒரு முறையை உருவாக்க வேண்டும் என்று விவசாயிகளும் பொதுமக்களும் கூறுகின்றனர்.” என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, விலங்கு கணக்கெடுப்பிற்காக செலவு செய்துள்ள தொகை குறைவானது எனவும், சேவை வழங்கும் அதிகாரிகள் சுயேச்சையாக முன் வந்துள்ளதாகவும் விவசாய, கால்நடைகள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி. பீ. விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
பயிர் சேதங்கள்
மந்திகள், குரங்குகள், மர அணில்கள், மற்றும் மயில்கள் ஆகிய விலங்குகளால் பயிர்களுக்குச் சேதம் ஏற்படுவதின் காரணமாக இந்த மாதம் 15 ஆம் திகதி விலங்கு கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்கள் தொடர்பில் தகவல் கிடைத்த போதிலும் அதற்காக இதுவரை முறையான மதிப்பீடுகள் மேற்கொள்ளாமையை அடிப்படையாகக் கொண்டு இந்த யோசனை முன்மொழியப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 3 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்