தென்னிலங்கையில் பாரிய அரச எதிர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு!
சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்திற்கு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
அதற்கமைய இன்று கொழும்பில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
கொழும்பில் முக்கிய கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம்
இதன் போது கைது செய்யப்பட்டுள்ள போராட்டக்காரர்களை விடுவிப்பது, வாழ்க்கைச் செலவுகளை கொண்டு செல்ல நிவாரணம் வழங்கப்பட வேண்டும் மற்றும் செயலிழந்துள்ள பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டு வருதல் உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
ஆகவே இவ்வாறான முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தே பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.
