நாட்டில் உக்கிரமான நெருக்கடி - கோட்டாபய அமெரிக்காவிற்கு செல்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்க தயார்!
முழு நாடும் தற்போது அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதனால், ஜனாதிபதிக்கு தற்போது மக்களின் ஆதரவு இல்லை. இந்த நிலையில், சர்வக்கட்சி அரசாங்கம் ஒன்றின் கீழ் நாட்டில் காணப்படும் உக்கிரமான நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வந்து, தேர்தலை நடத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
உக்கிர நிலைக்கு தீர்வு தேர்தலே
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இத தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புடன் அமெரிக்காவுக்கு செல்ல சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்கவும் நாம் தயார். அவரை பரிதாபகரமான நிலைமைக்குள் தள்ள எதிர்பார்க்கவில்லை.
நிறைவேற்று அதிகாரத்தை நாடாளுமன்றில் ஒப்படைக்க வேண்டும்
அவர் தனது நிறைவேற்று அதிகாரத்தை நாடாளுமன்றத்திற்கு வழங்க வேண்டிய சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது எனவும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
