காலி முகத்திடலில் பதற்றம் - ஆபத்தான நிலையில் நால்வர்!
காலிமுகத்திடல் போராட்ட களத்தில் இரு குழுக்களிடையே மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோதல் சம்பத்தின் போது 4 பேர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரவித்துள்ளனர்.
படுகாயமடைந்த நால்வரும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காலிமுகத்திடலில் மோதல்
படுகாயமடைந்தவர்கள் கொழும்பு -15 சேர்ந்த 15, 17 மற்றும் 20 வயதான இளைஞர்களும் வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவருமே எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் நால்வரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 72ஆம் இலக்க விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
காவல்துறை நீர்த்தாரை பிரயோகம்
இதேவேளை சிறிலங்கா பிரதமர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கலைப்பதற்காக காவல்துறையினர் நீர்த்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகைதாக்குதல் மேற்கொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 19 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்