தென்னிலங்கையில் தொடரும் பதற்றம் - ஆயிரக்கணக்கில் குவிக்கப்படும் படையினர்!
Sri Lanka Army
Sri Lanka Police
Colombo
Sri Lanka
SL Protest
By Kalaimathy
கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் பாதுகாப்பிற்காக தற்போது ஆயிரக்கணக்கான இராணுவம் குவிக்கப்பட்டு வருகின்றது.
அதன்படி தர்ஸ்டன் கல்லூரிப் பக்கத்திலிருந்தும் கிரீன் பாத் பக்கத்திலிருந்தும் பிளவர் வீதியின் அனைத்து நுழைவாயில்களிலும் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அவ்வழி ஊடக வெளியே செல்லவோ, அப்பகுதிக்குள் நுழையவோ எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமரை இராஜினாமா செய்யுமாறு கோரி தற்போதும் போராடி வருகின்ற நிலையில் மேல் மாகாணத்தில் ஊரடங்கும் நாடளாவிய ரீதியில் அவசரகால சட்டத்தையும் பிறப்பிக்க, தற்போது பதில் அரச அதிபராக கடமைகளைப் பொறுப்பேற்றுள்ள ரணில் உத்தரவிட்டுள்ளார்.





