நாட்டில் மேலும் பல கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம்!
sri lanka
patients
corona update
By Thavathevan
இலங்கையில் மேலும் கொரோனா தொற்று உறுதியான 662 நோயாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 650,802 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 16,201 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 121 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 618,262 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் நேற்றைய தினம் 08 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 16,339ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி