ஒட்டுமொத்த நாட்டு மக்களிடம் சுகாதார அமைச்சு முன்வைத்த கோரிக்கை..!
கொரோனா தொற்றினால் ஏற்படக்கூடிய இறப்புக்களை குறைக்க,கொரோனாக்கு எதிரான பூஸ்டர் தடுப்பூசிகளை பெறுவதன் முக்கியத்துவத்தை சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
கொரோனா அபாயம் தற்போது அதிகரித்துள்ளதாகவும், பூஸ்டர் தடுப்பூசிகளை பெறாதவர்களை விரைவில் பெற்றுக் கொள்ளுமாறும் சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சமித்த கினிகே இதனை தெரிவித்தார்.
கொரோனா பரவலால் நாட்டில் பாரிய பாதிப்பு ஏற்படவில்லை எனவும் எதிர்காலத்தில் புதிய வைரஸ் தொற்றுகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு பூஸ்டர் தடுப்பூசிகளை பெறுவது மிக அவசியமானது எனவும் வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்தார்.
மேலும் 6 பேர் பலி
இதேவேளை, இன்று இலங்கையில் மேலும் 6 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (24) இடம்பெற்ற இந்த மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் பதிவான மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 16,674 ஆக உயர்வடைந்துள்ளது.

