சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் விசேட அறிவிப்பு
சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிவிப்பில் நாடாளுமன்ற சிறப்புரிமை என்ற போர்வையில் விளையாட்டுத்துறை அமைச்சர் பொய்யான மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, உலகக் கிண்ணப் போட்டிகள் தொடர்பில் சரியான தகவல்களை மக்களுக்கு வழங்குவதே இதன் நோக்கம் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அர்ப்பணிப்பு
மேலும், எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையில் போட்டிகள் நடைபெறவுள்ளதாகவும், அதற்காக இந்த நாட்களில் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக இந்த நாட்களில், தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் வெளிச்ச அமைப்பை நிறுவுதல் மற்றும் அதன் ஏனைய வசதிகளை மேம்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும், இறக்குமதித் தடைகள் காரணமாக எதிர்பார்த்தபடி பணிகளை நிறைவு செய்ய முடியவில்லை எனவும் கிரிக்கெட் நிறுவனம் தெரியப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அந்த மைதானத்தில் மின்விளக்கு அமைப்பை மீள நிறுவுவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 1.5 பில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாக அறிக்கப்பட்டால், அது உண்மையல்ல எனவும் இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.