இலங்கையின் நெருக்கடி தொடர்பில் அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பு!!
அமெரிக்க இராஜாங்க திணைக்களம் மற்றும் திறைசேரி திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்மட்ட அதிகாரிகள் குழு இன்று அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை சந்தித்துள்ளது.
குறித்த சந்திப்பு தொடர்பில் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில், "இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து விவாதிக்க இது ஒரு சவாலான நேரம், இலங்கைக்கு வளமான, பாதுகாப்பான மற்றும் ஜனநாயக எதிர்காலத்தை அடைய உதவும் வகையில் நாங்கள் தொடர்ந்து உதவி மற்றும் நீண்ட கால பங்காளித்துவத்தை வழங்குவோம்" என ஜூலி சங் பதிவிட்டுள்ளார்.
.@USTreasury’s Robert Kaproth, @State_SCA’s Kelly Keiderling & I met w/ Pres @GotabayaR to discuss Sri Lanka’s economic crisis. It’s a challenging time, but we continue to deliver assistance & long-term partnership to help SL achieve a prosperous, secure & democratic future. pic.twitter.com/FSCJWnTVCa
— Ambassador Julie Chung (@USAmbSL) June 27, 2022
அரச தலைவரை சந்தித்த குழு
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், ஆசியாவுக்கான பிரதி உதவித் திறைசேரிச் செயலாளர் ரொபேர்ட் கப்ரோத் மற்றும் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான பிரதி உதவி இராஜாங்கச் செயலாளரான கெல்லி கெய்டர்லிங் ஆகியோரே இன்று அரச தலைவரைச் சந்தித்து இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பில் கலந்துரையாடினர்.
மூன்று நாள் பயணமாக இக்குழுவினர் நேற்று காலை இலங்கையை வந்தடைந்தனர்.
அவர்கள் இன்று காலை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் சந்தித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
