இலங்கை நெருக்கடி - பிரதம பௌத்த பீடாதிபதிகளிடமிருந்து வெளியான கடுமையான அறிக்கை(photo)
இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி குறித்து இலங்கையிலுள்ள மூன்று முக்கிய பௌத்த பிரிவுகளின் பிரதம பீடாதிபதிகள் கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண அரச தலைவர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் தங்களின் முன்மொழிவுகளை வெளிப்படுத்துமாறு பிரதம தேரர்கள் அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளனர்.
தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு வழங்கப்படாவிடின், ‘சங்க மாநாட்டை’ பிரகடனப்படுத்துவோம் என தலைமை பீடங்கள் எச்சரித்துள்ளன.
மேலும் 20வது திருத்தத்தை நீக்கி 19வது அரசியலமைப்பு திருத்தத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் எனவும் தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர், அஸ்கிரிய பீட மகாநாயக்கர் வரகாகொட ஸ்ரீ ஞானதாரன தேரர், ஸ்ரீலங்கா அமரபுர மகா நிகாயாவின் தொடம்பஹல ஸ்ரீ சந்திரசிறி தேரர் ஆகியோர் இந்த அறிக்கையில் கையொப்பமிட்டுள்ளனர்.


