இலங்கையில் விசேட டெங்கு ஒழிப்பு தினங்கள் பிரகடனம்
இலங்கையில் நாளை மற்றும் நாளை மறுதினத்தை விசேட டெங்கு ஒழிப்பு தினங்களாக பிரகடனப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்த இரண்டு நாட்களில் மக்கள் தங்கள் வீடுகளையும் அதனைச் சூழவுள்ள இடங்களையும் நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களையும் ஆராய்ந்து அவற்றை அகற்றுமாறு சுகாதார அமைச்சு கோரியுள்ளது.
துரித அதிகரிப்பு
இலங்கையில் கடந்த 4 வாரங்களில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் துரித அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், டெங்கு ஒழிப்பு தினங்கள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அண்மைக் காலங்களில் நாளொன்றுக்கு 200 முதல் 300 டெங்கு நோயாளர்கள் பதிவாவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படி, டிசம்பர் 26 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 75 ஆயிரத்துக்கு மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்கு அதிகமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெங்கு நோயாளர்கள்
இந்த நிலை மோசமடையும் பட்சத்தில் ஜனவரி மாதத்தில் நாடு முழுவதிலும் அதிகளவான டெங்கு நோயாளர்கள் இணங்காணும் அபாயம் ஏற்ப்படுமென சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.
இதேவேளை, டெங்கு நோயை பரப்பும் ஏடிஸ் நுளம்புகளின் எண்ணிக்கை நாட்டின் பல பகுதிகளில் கணிசமாக அதிகரித்துள்ளதாக பூச்சியியல் ஆய்வுகள் தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
