கோட்டாபய இருக்கும் வரை எதுவும் நடக்காது! அறிவிக்கப்படாத முடக்கல் நிலையில் இலங்கை
Gotabaya Rajapaksa
Lakshman Kiriella
Sri Lanka Economic Crisis
Sri Lankan political crisis
By S P Thas
சிறிலங்கா அரச தலைவராக கோட்டாபய ராஜபக்ச நீடிக்கும் வரை எந்தவொரு நாடும் உதவ முன்வராது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அறிவிக்கப்படாத முடக்கல் நிலை
நாடு அறிவிக்கப்படாத முடக்கல் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது. பாடசாலைகளும் பல்கலைகழகங்களும் மூடப்பட்டுள்ளன. மருந்துப்பொருட்களிற்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. அரச சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கட்டுப்பாடுகள் இல்லாததால் அத்தியாவசியப்பொருட்கள் பல பகுதிகளில் நினைத்த விலைக்கு விற்கப்படுகின்றன.
அரசாங்கம் பதவி விலகி மக்களின் புதிய ஆணையை பெறுவதற்காக தேர்தலை நடத்தவேண்டும். அரச தலைவராக கோட்டாபய ராஜபக்ஷ நீடிக்கும் வரை எந்த நாடும் இலங்கைக்கு உதவி வழங்காது என்றார்.
