அதளபாதாளத்தில் சென்ற இலங்கைக்கு திடீர் திருப்புமுனை
இலங்கை அதளபாதாளத்தில் சென்று கொண்டிருந்த வேளையில், சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பினால் திருப்புமுனையை ஏற்படுத்த முடிந்ததாக தேசிய பாதுகாப்பு தொடர்பான அதிபரின் சிரேஷ்ட ஆலோசகரும் அதிபர் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.
தெமட்டகொட மிஹிதுசென்புர சனசமூக மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே சாகல ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
கடினமான முடிவுகள்
அந்தத் திட்டத்திற்கு ஏற்ப எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் கடினமாக இருந்தபோதிலும், கடினமான மற்றும் குறுகிய காலத்திற்குள் மக்கள் சிறந்த வாழ்க்கைத் தரத்தை உருவாக்க முடியும் என்பதால், அரசாங்கம் என்ற ரீதியில் அந்த கடினமான முடிவுகள் அனைத்தும் எடுக்கப்பட்டன என்று அவர் சுட்டிக்காட்டினார்.
அன்று எடுக்கப்பட்ட தவறான பொருளாதார தீர்மானங்களினால் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய சாகல ரத்நாயக்க, இன்று அதிபர் ரணில் விக்ரமசிங்க நாட்டில் சரியான பொருளாதார வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தார்.

