உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : உண்மைகள் வெளிவருவதை தடுத்த கோட்டாபய!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று சில மாதங்களின் பின்னர் சிறிலங்காவின் அரச தலைவராகப் பொறுப்பேற்ற கோட்டாபய ராஜபக்ச உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மைகள் வெளிவருவதைத் தடுத்தாக சிறிலங்காவின் கத்தோலிக்க திருச்சபை புதிய குற்றச்சாட்டைத் தொடுத்துள்ளது.
இலங்கையில் 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று சில மாதங்களின் பின்னர் சிறிலங்காவின் அரசதலைவராக பொறுப்பேற்ற கோட்டாபய ராஜபக்ச, இந்த தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழுவை செயல் இழக்கச்செய்த நகர்வே அவர் இந்த விடயத்தில் சில உண்மைகள் வெளிவருவதை தடுப்பதை ஆதாரப்படுத்தியதாக கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
மைத்திரி வெளியிட்ட அறிவிப்பு
இதன் அடிப்படையில் தான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகள் குறித்து தனக்கு தெரியுமென அண்மையில் முன்னாள் அரசதலைவர் மைத்திரிபால சிறிசேன கருத்து தெரிவித்த நிலையில் அவரின் கருத்தை ஆய்வு செய்ய ஒரு சுயாதீன ஆணைக்குழு நியமிக்கப்படவேண்டும் என்ற கோரிக்ககையும் கத்தோலிக்க திருச்சபை முன்வைத்துள்ளது.
உண்மையான சூத்திரதாரி கோட்டாபய
அத்துடன் சர்வதேசஅளவில் இந்த விசாரணைகள் இடம்பெற்றால் தான் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி கோட்டாபய ராஜபக்ச என்ற உண்மை வெளிவரும் எனவும் கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |