ஈஸ்டர் தாக்குதல் பிரதான சூத்திரதாரி ஷஹ்ரானுடன் தொடர்பு - இந்திய புலனாய்வினரிடம் சிக்கிய ஐ.எஸ் பயங்கரவாதிகள்!
இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான ஷஹ்ரான் ஹாஷிமுடன் தொடர்பில் இருந்ததாக கருதப்படும் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர் உள்ளிட்ட இருவரை இந்திய புலனாய்வு பிரிவு கைது செய்துள்ளது.
இந்திய தேசிய புலனாய்வு முகமையினர் நேற்று கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தும் திட்டங்களில் பங்கேற்றதாகக் கூறப்படும் சனோபர் அலி மற்றும் ஷேக் ஹிதாயத்துல்லா ஆகியோரே தமிழகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார் வெடிப்பு சம்பவத்துடன் தொடர்பு
இந்தியாவின் கோயம்புத்தூரில் கடந்த ஒக்டோபர் 23 ஆம் திகதி காரை வெடிக்க வைத்து தகர்த்த சம்பவத்துடன் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர் ஷேக் ஹிதாயத்துல்லா தொடர்புகளை கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
அத்தோடு குறித்த நபர் உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான ஷஹ்ரான் ஹாஷிமுடனும் தொடர்பை பேணியதாக இந்திய புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாதத்திற்கான திட்டமிடல்கள்
இதேவேளை, இந்திய புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கடந்த பெப்ரவரி மாதத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் குற்றவியல் சதித்திட்டத்தில் ஈடுபட்டிருந்ததாகவும் பயங்கரவாதச் செயல்களுக்கான திட்டமிடல்களை அவர்கள் அங்கு மேற்கொண்டிருந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
