சர்வதேசத்தின் கடுமையான முடிவுகள்! திரிசங்கு நிலையில் சிறிலங்கா
சிறிலங்கா அரசாங்கம் திரிசங்கு சொர்க்க நிலையில் இருக்கிறது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை பேராசிரியர் கலாநிதி அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஊடறுப்பு நிகழ்ச்சில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “சர்வதேச நாணய நிதியத்தின் குழு நாட்டுக்கு வருகை தந்து இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு கேட்கிறது.
வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு
இப்பொழுது 3.6 பில்லியன் டொலர்கள் மத்திய வங்கியிடம் கையில் இருக்கின்றன. ஆனால் சிறிலங்கா அரசாங்கம் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தினால் இந்தத் தொகை குறையும். இறக்குமதிகள் அதிகரிக்கும்.
சர்வதேச நாணய நிதியமும் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தச் சொல்லியே கூறுகிறது. அப்படிச் செய்யும் பட்சத்தில் சிறிலங்கா அரசாங்கத்தினுடைய நிலைமை குறிப்பாக டொலர் பற்றாக்குறை ஏற்படலாம். மீண்டும் நெருக்கடி வரலாம்
சர்வதேச நாணய நிதியத்தின் ஒரு சில நிபந்தனைகளை பூர்த்தி செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கத்தால் இயலாமல் இருக்கிறது. அந்த இலக்கை அடைய முடியாமல் இருக்கிறது. இந்த இடத்தில் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு தாமதிக்குமாக இருந்தால் சிறிலங்காவினால் மேலும் வெளிநாட்டு கடன்களை பெற முடியாத சூழல் ஏற்படலாம்.
நிபுணர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் தீர்வு காணாத பட்சத்தில், நாட்டை விட்டு அவர்கள் வெளியேறும் வீதம் அதிகரிக்கும்.
வங்கியாளர்கள், தகவல் தொழிநுட்பவியலாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இவர்கள் வெளியேறுவது கண்ணுக்கு தெரியாது. வைத்தியர்கள் வெளியேறுவது மாத்திரம் தான் கண்ணுக்கு தெரியும். ஏனென்றால் நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள், இறப்பு விகிதம் அதிகரிக்கக்கூட வாய்ப்பிருக்கும். ஏனையவர்கள் வெளியேறுவது தெரியாது. அது பொருளாதாரத்தில் நீண்ட கால பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்றும் பேராசிரியர் அமிர்தலிங்கம் தெரிவித்தார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,