இலங்கையுடனான நிதி தொடர்பான பேச்சுக்களை விரைவாக முடிக்க முடியும்: சர்வதேச நாணய நிதியம் நம்பிக்கை வெளியீடு
Ranil Wickremesinghe
Sri Lankan Peoples
Economy of Sri Lanka
By Kiruththikan
சர்வதேச நாணய நிதியம் நம்பிக்கை
இலங்கையுடனான நிதி தொடர்பான பேச்சுக்களை முடிந்தவரை விரைவாக முடிக்கமுடியும் என்று சர்வதேச நாணய நிதியம் நம்பிக்கை கொண்டிருப்பதாக நிதியத்தின் நிர்வாகப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.
நெருக்கடியால் பாதிக்கப்பட்ட சிறிலங்காவில் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்வதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
டோக்கியோவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், இலங்கையில் உள்ள மக்களின் நல்வாழ்வில் தமது நிதியம் மிகவும் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
இலங்கை, எரிபொருள் உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளதாகவும் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா குறிப்பிட்டுள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்