கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் குடிவரவு - குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்
பொருளாதார நெருக்கடி
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாமல் பலர் குடும்பமாக படகுகள் மூலம் தமிழகம் சென்று வருகின்றனர்.
அதேபோன்று மற்றொரு தரப்பினரும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க முடியாமல் வேலை வாய்ப்பு மற்றும் பிறதேவைகளுக்காக சட்டரீதியாக நாட்டிலிருந்து வெளியேறும் நிலைமை அதிகரித்து காணப்படுகிறது.
அந்த வகையில் கடந்த ஏழு மாதங்களில் மட்டும் சுமார் 6 இலட்சம் கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் முதல் ஏழு மாதங்களில் சுமார் 6 இலட்சம் கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் 147,192 கடவுச்சீட்டுகளே விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்,


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 12 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்