புலம்பெயர் இலங்கையர்களின் பணம் அனுப்பல் 50 சதவீதத்தினால் வீழ்ச்சி! மத்திய வங்கி வெளியிட்ட தகவல்
Central Bank of Sri Lanka
Sri Lankan Peoples
Saudi Arabia
Dollars
Europe
By pavan
கடந்த வருடத்தை விட இந்த வருடத்தில் வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்களின் பணம் அனுப்பல் 50% இனால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
2021 ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்கள் மொத்தமாக 3,777.6 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை நாட்டுக்கு அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில், இவ்வருடத்தின் ஜனவரி முதல் ஜூலை வரையான காலப்பகுதியில் 1,889.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை மாத்திரமே அனுப்பியுள்ளனர்.
மாத பணவனுப்பல்
மேலும், இந்த வருடத்தின் மே மாதத்தில் 304 மில்லியன் அமெரிக்க டொலரையும் ஜூன் மாதத்தில் 274 மில்லியன் அமெரிக்க டொலரையும் ஜூலை மாதத்தில் 297.5 மில்லியன் அமெரிக்க டொலரையும் வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்கள் அனுப்பியதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்