தேர்தல் மறுசீரமைப்புக்கான ரணிலால் நியமிக்கப்பட்ட புதிய குழு
சிறிலங்கா அரசாங்கத்தின் உத்தேச தேர்தல் முறை மறுசீரமைப்புக்கான முன்மொழிவுகளைத் தயாரிப்பதற்காக குழுவொன்று அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் நியமிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று(18) வெளியிடப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் நாடாளுமன்றத் தேர்தல் முறையில் மாற்றங்களை மேற்கொள்ள விசேட யோசனையொன்றை நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச அண்மையில் அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பித்திருந்தார்.
விசேட குழு
இந்த யோசனை தொடர்பிலான விடயங்களை ஆராய விசேட குழுவொன்றை ஸ்தாபிக்கவும் சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்திருந்தது.
இதற்கமைய, சிறிலங்காவின் முன்னாள் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையில் 9 பேர் கொண்ட விசேட குழுவொன்றை அதிபர் ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார்.
இதேவேளை, சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த யோசனைக்கு எதிர்க்கட்சி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன், இதற்காக அமைக்கப்படும் எந்தவொரு குழுவிலும் பங்கு வகிக்க மாட்டோம் எனவும் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.