அதிகரிக்கப்படவுள்ள மின் கட்டணம்: வெளியான அறிவிப்பு
மின் கட்டணத்தை அதிகரிப்படும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக மின்சார பயனர் சங்கத்தின் தேசிய செயலாளர் சஞ்சீவ தம்மிக்க தெரிவித்துள்ளார்.
மின்சார திருத்தச் சட்டம், ஒப்பந்ததாரர்களுக்கு எளிதான முறையில் திருத்தப்பட்டுள்ளமையினால் மின் கட்டணத்தை அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இத தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இப்போது மின்சார வாரியம் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
விரும்பாத ஊழியர்கள்
இந்த நான்கு நிறுவனங்களில் சேர விரும்பாத ஊழியர்கள் வெளியேறுவதற்கான ஒரு அமைப்பு வகுக்கப்பட்டுள்ளது.
இது முடிந்ததும், வெளியேறும் ஒவ்வொரு ஊழியருக்கும் CEB ஐந்து மில்லியன் ரூபாய் வரை ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்கும்.
பணிநீக்கம்
சுமார் ஐந்தாயிரம் ஊழியர்கள் வெளியேறினால், அவர்கள் ஐந்து மில்லியன் ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும், அதாவது இரண்டாயிரத்து ஐநூறு மில்லியன் (25 பில்லியன் ரூபாய்).
இந்த அளவு தொகையை ஈடு செய்வதற்கு எதிர்காலத்தில் நுகர்வோரிடமிருந்து மின் கட்டணங்கள் மூலம் இதனை அறவிட திட்டங்கள் இருக்கலாம்.
எனவே, பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு ஈடுசெய்ய மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்படாது என்ற உத்தரவாதத்தை அரசாங்கத்திடம் நாங்கள் கோருகிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

