அரபு இராச்சியத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள சிறிலங்கா அமைச்சர்!
சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சவுதி அரேபியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய அமைச்சர் அலி சப்ரி எதிர்வரும் 23 ஆம் திகதி சவுதி அரேபியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இளவரசர் அழைப்பு
சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சௌதின் அழைப்பின் பேரில் அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இதன்போது இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்த கலந்துரையாடல்களில் அவர் ஈடுபடவுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
முக்கிய சந்திப்புக்கள்
அத்துடன், இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, வளைகுடா ஒத்துழைப்பு பேரவை மற்றும் மக்கா மற்றும் மதீனா ஆளுநர்களையும் அமைச்சர் அலி சப்ரி சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 21 மணி நேரம் முன்
