மழை இல்லாவிட்டால் இரண்டு மாதங்களில் மின்வெட்டு : இலங்கைக்கு ஏற்படவுள்ள சிக்கல்
குளத்தின் அணைகளை திறந்து விடும் போது பின்னர் தற்செயலாக மழை இல்லாமல் போய் அணை நிரம்பாமல் போனால் அடுத்த இரண்டு மாதங்களில் இலங்கையில் மின்வெட்டு நிச்சயமாக ஏற்படும் என சுற்றுச்சூழலியலாளர் சிறீ சக்தி சுமணன் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் அகளங்கம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை வரலாற்றில் அதிக மழை பெய்தது இந்த வருடத்திலாகும். இந்த மழைக்கு நாங்கள் பழக்கப்படவில்லை. புயலின் திசையில் ஏற்பட்ட மாற்றமும் இந்த அனர்த்தத்திற்கு காரணமாகும்.
இந்த அனர்த்தம் தொடர்பில் குறித்த சாரரரை குற்றஞ்சாட்ட முடியாது. தீர்மானம் எடுப்பவர்கள் சரியாக செயற்பட வேண்டும்.
இலங்கையில் வானிலை அறிக்கைகள் மக்களுக்கு விளங்கும் வகையிலும் அபாயத்தை விளக்கும் வகையிலும் தெளிவாக வழங்கப்பட வேண்டும்.
யாழ்ப்பாணத்தின் தரைக்கீழ் நீர் வளம் மற்றும் இது குறித்த மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க.....
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
புலம்பெயர்தலின் வழியாக ஈழப் போராட்டத்திற்குத் துணைநின்ற தமிழர்கள்… 1 மணி நேரம் முன்