இன்றையநாளை கொண்டாடிய சிங்களவர்கள் - உணர்வுபூர்வமாக அனுஷ்டித்த தமிழர்கள்!
இலங்கையில் நடந்த உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து 14 வருடங்கள் பூர்த்தியை நினைவு கூரும் நிகழ்வு நுவரெலியாவில் உள்ள இலங்கை சிங்க ரெஜிமென்ட் 3 வது படையணி முகாமில் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில், யுத்தத்தில் உயிரிழந்த இராணுவத்தினரை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளதுடன், மத குருமார்களின் மத அனுஷ்டானங்களும் நடைபெற்றுள்ளது.
சிங்கள மக்களின் அஞ்சலி

தொடர்ந்து, யுத்தத்தில் உயிர் நீர்த்த இராணுவ வீரர்களின் குடும்பத்தவர்கள், நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட, பிரதேச செயலாளர்கள், மேலதிக செயலாளர்கள் மற்றும் முப்படைகளின் பொறுப்பதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் மக்களின் அஞ்சலி

இதேவேளை, 2009 ம் ஆண்டு இறுதி யுத்தத்தில் இலங்கையின் அரச படையினரால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் உறவுகளை நினைவு கூறும் நிகழ்வுகள் ஈழத் தமிழர்கள் வாழும் அனைத்து இடங்களிலும் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக உள்நாட்டிலும், தமிழர் வாழும் புலம்பெயர்ந்த தேசங்கள் அனைத்திலும் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.