குழந்தையின் பசிக்காக பால்மா திருடிய தந்தை..! நாட்டில் தொடரும் அவலம்
Sri Lanka Police
Sri Lanka Economic Crisis
Sri Lanka Food Crisis
By Kanna
அளுத்கமவில் உள்ள பல்பொருள் அங்காடியில் இருந்து 3,100 ரூபா பெறுமதியான குழந்தைகளுக்கான பால் மாவை திருடிய குற்றச்சாட்டில் 30 வயதுடைய மீனவத் தொழில் புரியும் நபரொருவர் அளுத்கம காவல்துறையினரால் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது ஒரு வயது எட்டு மாத குழந்தையின் பசியை போக்குவதற்காக இவ்வாறு பால்மாவை திருடியதாக அவர் அழுது கொண்டே காவல்துறையிடம் கூறியுள்ளார்.
சந்தேகநபர் பல்பொருள் அங்காடிக்கு சென்று பால்மாவை எடுத்து அவர் அணிந்திருந்த சட்டையில் மறைக்க முற்பட்ட போது, அங்கு பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர் சம்பவத்தை பார்த்து அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அவர் அளுத்கம காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது,

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி