நடு வீதியில் பெண்ணுக்கு திருட்டுத்தனமாக கொடுக்கப்பட்ட எரிபொருள்! வைரலாகும் காணொளி
Viral Video
Sri Lankan Peoples
Sri Lanka Fuel Crisis
By Vanan
காரொன்றில் வந்த பெண் ஒருவருக்கு தனிப்பட்ட முறையில் வீதியில் வைத்து எரிபொருள் தாங்கி ஊர்தியிலிருந்து எரிபொருள் வழங்கப்பட்ட மற்றுமொரு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இது தொடர்பான காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
குறித்த பெண்ணுக்கு எரிபொருள் நிலையத்திற்கு எரிபொருளை ஏற்றிச்சென்ற இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் தாங்கி ஊர்தியில் இருந்தே 2 கொள்கலனில் எரிபொருள் எடுத்து வழங்கப்பட்டுள்ளமை காணொளியில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, கொழும்பில் காரொன்றில் வந்த பெண்ணுக்கு வீதியில் வைத்து எரிபொருள் ஊர்தியிலிருந்து எரிபொருள் எடுத்து வழங்கப்பட்ட மற்றுமொரு காணொளியொன்றும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்