மீண்டும் இந்தியாவிற்கு போட்டியாக சிறிலங்காவில் கால் பதிக்கும் சீனா - வலுக்கும் போட்டி!
எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் இலங்கையில், வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.
அதற்கமைய எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் இருந்து அதிகமான நிறுவனங்களுக்கு எண்ணெய் இறக்குமதி செய்வதற்கும் சில்லறை வர்த்தக நடவடிக்கைகளை இலங்கையில் மேற்கொள்வதற்கும் அனுமதியளிக்கும் முன்மொழிவுக்கு சிறிலங்கா அமைச்சரவை கடந்த ஜூன் மாதம் ஒப்புதல் அளித்தது.
இலங்கையில் மற்றுமொரு சீன நிறுவனம்

இந்நிலையில், சீனாவின் மிகப் பெரிய பெட்ரோ கெமிக்கல் நிறுவனமான சினோபெக், எரிபொருள் இறக்குமதி, விநியோகம் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை விற்பதற்காக இலங்கை சந்தையில் நுழைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது இலங்கையின் எரிபொருள் விநியோகத்தில் 90 வீதம் அரசாங்கத்திற்கு சொந்தமான சிலோன் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊடாகவும் எஞ்சிய 10 வீதமானது லங்கா ஐஓசி மூலமாகவும் வழங்கப்படுகிறது.
இந்தியா-சீனா போட்டிக்குள் சிறிலங்கா

இவ்வாறான நிலையில், சீன நிறுவனமும் இலங்கையில் கால்பதிக்கவுள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் சீனாவின் சினோபெக் நிறுவனம் ஏற்கனவே ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் செயற்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜே.விபியால் தேசிய மக்கள் சக்திக்கு ஏற்படப்போகும் இறுதி பேரழிவு 1 மணி நேரம் முன்