கோட்டா கோ கம கூடாரங்கள் அகற்றப்படாது - சட்டமா அதிபர் அதிரடி அறிவிப்பு!
காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கம போராட்டகளத்தில் காணப்படும் கூடாரங்கள் அகற்றப்படாது என சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
எனவே எதிர்வரும் 10ஆம் திகதி வரை குறித்த கூடாரங்கள் அகற்றப்படாது எனவும் அறிவித்துள்ளார்.
இதேவேளை கொழும்பு காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் உள்ள கூடாரங்களை அகற்றுமாறு போராட்டக்காரர்களுக்கு காவல்துறையினர் அறிவிப்பு விடுத்திருந்தனர்.
கூடாரங்களை அகற்ற காவல்துறை உத்தரவு
இந்த கூடாரங்கள், கொட்டகைகளை அகற்றுவதற்கு இன்று மாலை ஐந்து மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. காலிமுகத்திடலில் கூடாரங்கள், கொட்டகைகள் அமைத்திருப்பதன் மூலம் பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக அவற்றை அகற்றுமாறும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சில போராட்டக்காரர்கள் போராட்டக்களத்தில் உள்ள கூடாரங்களை அகற்றியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சில போராட்டக்காரர்கள் என்ன நடந்தாலும் தமது கூடாரங்கள், கொட்டகைகளை அகற்றப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான நிலையிலேயே கூடாரங்கள் அகற்றப்படாது என தற்போது சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 14 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்