பதவி நீக்கப்படும் முக்கிய நிறுவனம் ஒன்றின் தலைவர்!
சமையல் எரிவாயு நிறுவனத்தின் தலைவர், பதவி நீக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் எரிவாயு கலவை சம்பந்தமாக நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான நெருக்கடியை கவனத்தில் கொண்டே நிறுவனத்தின் தலைவரை பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தலைவர் தெசார ஜயசிங்க இன்றைய தினம் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படவுள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிறுவனத்தின் புதிய தலைவராக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சரபயின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனில் கொஸ்வத்த லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகிய பின்னர் தெசார ஜயசிங்க அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் லிட்ரோ காஸ் நிறுவனத்திற்கு இரண்டு தலைவர்கள் நியமிக்கப்பட்டதுடன் மூன்றாவதாக ரேணுக பெரேரா தற்போது நியமிக்கப்படவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.