இந்தியாவின் கரிசனைக்கு மத்தியிலும் சீன கப்பலுக்கு அனுமதி அளித்தது இலங்கை
சீன கப்பலுக்கு அனுமதி
குறித்த கப்பல் தொடர்பாக கொழும்பு ஊடகமொன்று பாதுகாப்பு அமைச்சை வினவியபோதே அமைச்சின் பேச்சாளர் ஒருவர் மேற்கண்ட விடயத்தை தெரிவித்துள்ளார்.
விண்வெளி மற்றும் செய்மதி கட்டுப்பாடு ஆய்வு
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரவுள்ள குறித்த கப்பல் அவசியமான வசதிகளைப் பெற்ற பின்னர் இந்து சமுத்திரத்தின் வடமேல் கடற்பரப்பில் சுமார் ஒரு வார காலம் நங்கூரமிடப்பட்டு விண்வெளி மற்றும் செய்மதி கட்டுப்பாடு மற்றும் ஏனைய ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
யுவான் டெங் 5 கப்பல் கடந்த ஜுலை மாதம் 13 ஆம் திகதி சீனாவின் பியேன் துறைமுகத்திலிருந்து தமது பயணத்தை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தியா - சீனா முட்டி மோதல்
இதனிடையே, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் தாக்கம் செலுத்தும் சகல விடயங்கள் தொடர்பிலும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவதாக இந்தியா தெரிவித்திருந்தது.
பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்பதற்கு தயாராக இருப்பதாக இந்திய வெளிவிகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.
எனினும் தமது சட்டபூர்வமான கடல் நடவடிக்கைகளில் தலையிடுவதை சம்பந்தப்பட்ட தரப்புக்கள் தவிர்க்கும் என தாம் நம்புவதாக சீனா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.