தோல்விக்கான காரணத்தை பொதுவெளியில் வெளியிட மறுக்கும் சஜித் அணி
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 35 ஆசனங்களை பெற்று படுதோல்வியடைந்த ஐக்கிய மக்கள் சக்தி மீண்டும் எதிரணியில் அமரவுள்ளது.
தமது கட்சியின் இந்த தோல்விக்கான சில காரணங்களை வெளிப்படுத்த முடியாது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார்(S.M. Marikar) இன்று(18) தெரிவித்தார்.
“எங்கள் தோல்விக்கான சில காரணங்களை மூடிய கதவுகளுக்குப் பின்னால் கட்சியின் மற்ற உறுப்பினர்களுடன் மட்டுமே விவாதிப்போம்,” என்று மரிக்கார் இன்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
சரியான நேரத்தில் வருவார்
கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(sajith premadasa) ஏன் பொதுமக்களிடம் இருந்து விலகி நிற்கிறார் என்று கேட்டதற்கு, சரியான நேரத்தில் பிரேமதாச பொது வெளியில் வருவார் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் சஜித் பிரேமதாச இதுவரை பொதுவெளியில் தோன்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 25