சடுதியாக குறைவடையும் தங்க விலை..! தங்கம் வாங்க காத்திருப்போருக்கான மகிழ்ச்சி தகவல்
உலக சந்தையில் இன்றையதினம் (10) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 615,848 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில், இன்றைய தினம் தங்கத்தின் விலையானது சற்று குறைவடைந்த நிலையில் உள்ளது.
இன்றைய தினம் 24 கரட் 8 கிராம் ( 1 பவுன் )தங்கத்தின் விலை 173,800 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 22 கரட் 8 கிராம் (1 பவுன் ) தங்கத்தின் விலை 159,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தங்கத்தின் விலையானது பாரிய அளவில் எழுச்சி கண்டமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய தங்க நிலவரத்தின் முழு விபரம்
தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 615,848.00
24 கரட் 1 கிராம்தங்கத்தின் விலை ரூபாய் 21,730.00
24 கரட் 8 கிராம் ( 1 பவுன் )தங்கத்தின் விலை ரூபாய் 173,800.00
22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 19,920.00
22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 159,400.00
21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 19,020.00
21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 152,150.00
இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலாப் பயணிகள் - எந்த நாட்டவர்கள் அதிகம் தெரியுமா..! |
