எரிபொருள் விநியோகம் தொடர்பில் அதிபர் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பு!
பல துறைகளில் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதால் பல நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், எரிபொருள் விநியோகம் தொடர்பில் அதிபர் ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
எரிபொருள் விநியோகம் எந்த தடையுமின்றி முன்னெடுக்கப்படுவதாக அதிபர் ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
எரிபொருள் விநியோகம்
எரிபொருளை சீராக விநியோகிப்பது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய, சாதாரண செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் இதுவரை 6,600 லீற்றர் கொள்ளளவைக் கொண்ட 300 க்கும் மேற்பட்ட பெற்றோல், டீசல் எரிபொருள் தாங்கி விநியோகிப்பதற்கு தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தினை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் சிலோன் பெட்ரோலியம் சேமிப்பு டெர்மினல்ஸ் லிமிடெட்டின் தலைவர் எம்.யு. மொஹமட் உறுதிப்படுத்தியுள்ளதாக அதிபர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
