அரச ஊழியர்களுக்காக அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்! வெளியான அறிவிப்பு
Government Employee
Sri Lanka
Sri Lanka Fuel Crisis
By pavan
முக்கிய அறிவிப்பு
அரசாங்க ஊழியர்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்பொன்று சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளால் அதிகரித்துள்ள போக்குவரத்துச் செலவுகளைக் கருத்திற் கொண்டு வீட்டுக்கு அருகாமையில் உள்ள அலுவலகங்களில் பணி செய்வதற்கான வாய்ப்பு அரச ஊழியர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரச ஊழியர்கள்
வீட்டுக்கு அண்மித்த பிரதேசங்களில் உள்ள அரச அலுவலகங்களுக்கு அரச ஊழியர்களை இடமாற்றம் செய்யும் முறைமை ஏற்படுத்தப்படவுள்ளது.
இந்நிலையில், போக்குவரத்துக் கட்டணங்கள் உயர்வால் பேருந்துகளில் கடமைக்குச் செல்ல முடியாமல் அரச ஊழியர்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

10ம் ஆண்டு நினைவஞ்சலி