மீண்டும் கூடும் கட்சித் தலைவர் கூட்டம் - தாக்கல் செய்யப்படவுள்ள வேட்பு மனு!
கட்சித் தலைவர் கூட்டத்திற்கு மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதற்கமைய நாளை காலை10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கட்சி தலைவர் கூட்டம் நடைபெறவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை எதிர்க்கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளருக்கான வேட்பு மனுவை நாளை காலை 10.00 மணிக்கு சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Responding to request by PM @RW_UNP to @ParliamentLK Speaker to propose a name by consensus for PM, opposition parties will today discuss with various parties and groups in government to get such consensus. We will propose this name to Speaker at 10am tomorrow. #SriLankaCrisis
— Harsha de Silva (@HarshadeSilvaMP) July 14, 2022
