கட்சி பதவியில் இருந்து நீக்கப்படவுள்ள பீரிஸ்!
G. L. Peiris
Ranil Wickremesinghe
Sri Lanka
Sri Lanka Podujana Peramuna
By Kalaimathy
பொதுஜன பெரமுனவின் பதவியில் இருந்து ஜீ.எல்.பீரிஸ் வெளியேற்றப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அதிபர் தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டுக்கு புறம்பாக டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளித்தமையே இதற்கான காரணம் என தெரியவருகிறது.
அதனடிப்படையில், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸை, பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியில் இருந்து நீக்க அந்த கட்சி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
புதிய அதிபரைத் தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றத்தில் நடக்கும் வாக்கெடுப்பில் பதில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பது என பொதுஜன பெரமுன உத்தியோகபூர்வமாக தீர்மானித்துள்ளது.
